அரசு வேலை தருவதாக ரூ.6.72 லட்சம் மோசடி
கோவை; கோவை, ஈச்சனாரி மாசேகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் மனைவி ராஜேஸ்வரி, 30; தனியார் பள்ளி ஆசிரியை. ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த மணி என்பவர் ராஜேஸ்வரி குடும்பத்தினருக்கு பழக்கமானார். அவர் ராஜேஸ்வரிக்கு, அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை வாங்கித் தருவதாக கூறினார். அதற்காக ரூ.10 லட்சம் பணம் கேட்டார். ராஜேஸ்வரி ரூ.8 லட்சம் கொடுத்தார். நீண்ட நாட்கள் ஆகியும் கூறியபடி, ராஜேஸ்வரிக்கு அரசு வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். மணி ரூ.1.27 லட்சம் கொடுத்தார்.மீதி பணத்தை பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை. ராஜேஸ்வரி ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், இதுகுறித்து விசாரிக்கின்றனர்.