உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.9,000- பென்ஷன் நிர்ணயிக்க கோரிக்கை

ரூ.9,000- பென்ஷன் நிர்ணயிக்க கோரிக்கை

கோவை; கோவை மாவட்டம், அனைத்துத் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், பாலசுந்தரம் ரோட்டில் உள்ள மண்டல பி.ப்., அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.கோவை மாவட்டம், அனைத்துத் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகி தங்கவேல் கூறுகையில், ''வருங்கால வைப்புநிதி தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொழிலாளர்களை இழுத்தடிக்கும் நடவடிக்கைகளை கைவிட கோரியும், குறைதீர்ப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்க கோரியும், பி.எப்., பென்ஷனை, 9,000 ரூபாய்- ஆக நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும், பி.எப்., கமிஷனரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !