உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆங்கில புத்தாண்டை வரவேற்க ஆர்.எஸ்.எஸ்.,கோமாதா பூஜை

ஆங்கில புத்தாண்டை வரவேற்க ஆர்.எஸ்.எஸ்.,கோமாதா பூஜை

கோவை:ஆங்கில புத்தாண்டு, 2024 வரவேற்கும் விதமாக, உலக அமைதியையும் அனைத்து மக்களுக்கான ஒற்றுமையையும் வலியுறுத்தி, கணபதி வேணுகோபால்சாமி கோவில் அருகே ஆர்.எஸ்.எஸ்.,சார்பில், கோமாதாபூஜை நடந்தது.கன்றுடன் கூடி கோமாதாவிற்கு மஞ்சள், குங்கும திலகமிட்டு, மலர் மாலை அணிவித்து, உடல் முழுக்க கஸ்துாரி மஞ்சள் தடவி, கற்பூர தீபமேற்றி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.தென்னிந்திய ஆர்.எஸ்.எஸ்., ஊடகத்துறை பொறுப்பாளர் ஸ்ரீராம் தலைமை வகித்தார். வழக்கறிஞர் திருலோகசந்தர் முன்னிலை வகித்தார்.இதன்பின், கோமாதா பூஜை நடந்தது. வெள்ளலூர் கீதா பஜன் குழுவினர் அச்சம் பாளையம் சண்முகம் ஏற்பாட்டில் பஜனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை