மேலும் செய்திகள்
பொள்ளாச்சி அருகே ஆர்.எஸ்.எஸ்., பேரணி
25-Oct-2026
கோவை: ஆர்.எஸ்.எஸ்.,பேரணிகோவை மாநகரில் ஆறு இடங்களில் நேற்று நடந்தது. இதில் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின்(ஆர்.எஸ்.எஸ்.,) நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக விஜயதசமி பதசஞ்சலன் அணிவகுப்பு ஊர்வலம் கோவை மாநகரில் ஆறு இடங்களில் நேற்று நடந்தது. ராம் நகர் ராமர் கோவில் அருகே துவங்கிய ஊர்வலம் சத்யமூர்த்தி ரோடு, விவேகானந்தா ரோடு, சாஸ்திரி ரோடு, சென்குப்தா வீதி, வெங்கடசாமி லே-அவுட், காட்டூர் விநாயகர் கோவில், அன்சாரி வீதி, காளிங்கராயன் வீதி வழியாக மீண்டும் துவங்கிய இடத்துக்கு வந்தது. ஊர்வலத்துக்கு பின் ராமர் கோவில் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. மாநகரில் நடந்த அணிவகுப்பில், ஆ.எஸ்.எஸ்., அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். கோவை குளத்துப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் இருந்து துவங்கிய பேரணி தொண்டாமுத்துார் போலீஸ் ஸ்டேஷன், மாதம்பட்டி ரோடு, போளுவாம்பட்டி ரோடு, புத்துார் ரோடு வழியாக, சந்தைப்பேட்டை அடைந்து, மாரியம்மன் கோயில் மைதானத்தில் நிறைவடைந்தது. இக்கூட்டத்தில், மதுரை ஆதினம் ஸ்ரீமத் விஷ்லிங்கம் தம்பிரான் ஆசியுரையாற்றினார். மகாநகர் காரியவாக் சங்கரநாராயணன் சிறப்புரையாற்றினார்.
நாடாக உருவாக்க வேண்டும்'வெள்ளலூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின், நூற்றாண்டு நிறைவு முன்னிட்டு, அணிவகுப்பு ஊர்வலம், பொது நிகழ்ச்சி இன்று (நவ.,1) நடந்தது. இங்கு நடந்த கூட்டத்தில் கோயம்புத்துார் கிறிஸ்டியன் அசெம்பிளியின் மூத்த போதகர் டேவிட் டேனியல் பேசியதாவது:ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒரு சக்தியின் மையமாக உள்ளது. வருங்கால இந்தியாவை சிறந்த ஒரு நாடாக கொண்டு வர வேண்டும் எனும் ஒரு தொலைநோக்கு சிந்தனை உடையவர்களாக இவ்வியக்கம் செயல்பட்டு வருகிறது.மின் நிலையத்திலிருந்து மின்சாரம் எப்படி வெளியே வருகிறதோ, அது போல் அனேக ஒளிக்கதிர்கள் நம் உள்ளங்களுக்குள் பாய்ந்து, உங்களை உருவாக்கி இந்த நாட்டில் நல்ல மைந்தர்களாக சமுதாயத்திற்கு பணி செய்யும் விதமாக இவ்வியக்கம் உருவாக்குகிறது.நம் நாட்டை சிறந்த நாடாக உருவாக்க அர்ப்பணிப்பு அவசியம். அதை நாம் உருவாக்க முடியும். மத்திய அரசு, நம் நாட்டை உலகின் தலைசிறந்த நாடாக உருவாக்கும் தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
25-Oct-2026