உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆர்.டி.ஓ., உத்தரவு அமலாகவில்லை; ஊரை விட்டு ஒதுக்குவதாக புகார்

ஆர்.டி.ஓ., உத்தரவு அமலாகவில்லை; ஊரை விட்டு ஒதுக்குவதாக புகார்

அன்னுார்; ஆர்.டி.ஓ., உத்தரவு பிறப்பித்தும் ஊரை விட்டு ஒதுக்குவதாக 15 குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.வடக்கலுாரில் காதல் திருமணம் செய்த 15 குடும்பத்தினரிடம், கோவில் வரி வாங்குவதில்லை. சுப, துக்க நிகழ்ச்சிகளில் மற்றவர்கள் பங்கேற்பதில்லை. ஊரை விட்டு ஒதுக்கி வைக்கின்றனர் என சுந்தரம் தலைமையில், 15 குடும்பத்தினர், கலெக்டர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் தெரிவித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன்பு கோவை கலெக்டர் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் விசாரணை நடத்தினார்.விசாரணைக்கு ஆர்.டி.ஓ., பிறப்பித்த உத்தரவில், ''அனைத்து குடும்பங்களிடமும் நேரடியாக சென்று மாங்கல்ய வரி வசூலிக்க வேண்டும். யாரையும் புறக்கணிக்க கூடாது. சரி சமமாக நடத்த வேண்டும். கோவிலில் வழிபாடு நேரம் தவிர மற்ற நேரத்தில் யாரும் அமரக்கூடாது.சில குடும்பங்களை ஒதுக்கினால், ஒதுக்குவோர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவான நபர்களை கோவில் நிர்வாகத்துக்கு நியமிக்க வேண்டும்,'' என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் சுந்தரம் தரப்பினர், நேற்று முன்தினம், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., வை சந்தித்து கூறுகையில், ''ஆர்.டி.ஓ., உத்தரவை எதிர்த்தரப்பினர் மதிக்கவில்லை. எங்களிடம் கோவில் வரி வசூலிக்கவில்லை. வருகிற 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.எங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. ஒதுக்கி வைக்கின்றனர்,'' என புகார் தெரிவித்தனர்.இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள், புகார் தெரிவித்தோரிடம், உறுதி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ