மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர் 3வது நாளாக போராட்டம்
03-Jul-2025
கோவை; தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி ஊதியம் வழங்க கோரி, போராட்டம் நடந்தது.ஊரக வளர்ச்சித்துறையின்கீழ் ஊராட்சிகளில் பணிபுரியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள், மகளிர் திட்ட தொழிலாளர்கள், கிராம சுகாதார ஊக்குனர்கள், அனைத்து திட்ட கணினி இயக்குனர்கள், துாய்மை பாரத இயக்கம், சமூக தணிக்கை, மகளிர் திட்ட மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுனர்கள். வட்டார இயக்க மேலாளர்கள் ஆகியோர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை, அரசாணை மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, சம வேலைக்கு சம ஊதியம் என்ற விகிதத்தில் வழங்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
03-Jul-2025