மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
09-Apr-2025
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
02-Apr-2025
அன்னுார் : ஊரக வளர்ச்சித் துறை சார்பில், மாநில அளவிலான முற்றுகை போராட்டம் வரும் 16ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் முத்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து பேசுவதற்காக, கடந்த மார்ச் 28ம் தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் சென்ற, மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம், கலெக்டர் கிரேஸ் பச்சா அநாகரிகமாக நடந்து, கோரிக்கை மனுவை கசக்கி, குப்பை தொட்டியில் போட்டுள்ளார்.இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.எனவே, அனைத்து மாவட்டங்களிலிருந்தும், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஊழியர்கள் வரும் 16ம் தேதி காலை 10:00 மணிக்கு, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் அலுவலர்கள், ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
09-Apr-2025
02-Apr-2025