உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் இன்று கோவைக்கு வருகிறார்

சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் இன்று கோவைக்கு வருகிறார்

கோவை:ஹரிஹரபுரம், ஸ்ரீமடத்தின் பீடாதிபதியான சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் இன்று கோவை வருகிறார்.கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டம், ஹரிஹரபுரத்தில் ஸ்ரீமடம் எனும் ஸ்ரீ ஆதிசங்கராச்சார்ய சாரதா லட்சுமி நரசிம்ம பீடம் அமைந்துள்ளது. இதன், 25வது பீடாதிபதியான ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள், இன்று கோவைக்கு விஜயம் செய்கிறார்.அவருக்கு கோவை, ராம்நகர், ஐயப்ப பூஜா சங்கத்தில் மாலை, 5:30 மணிக்கு, பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.பிப்., 11ம் தேதி வரை கோவையில் தங்கியிருக்கும் அவர், தினமும் காலை, 9:30 மணிக்கு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்குகிறார்.தொடர்ந்து, பாராயணம், பஜன் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. தினமும் மாலை, 6:00 மணிக்கு சக்கர நவாவர்ண பூஜை நடத்துகிறார். பிப்., 9ம் தேதி காலை, 9:30 மணிக்கு புலியகுளம், விக்னேஷ் மஹாலில் சுவாமிகள் தரிசனம் இடம்பெறுகிறது.பிப்., 11ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வடவள்ளி, நானா நானீ அருகே மஹாசங்கரா மினி ஹாலில் சக்கர நவாவர்ண பூஜை நடத்துகிறார்.பக்தர்கள் இந்த அரிய தெய்வீக வைபவத்தில் பங்கேற்று, சுவாமிகளின் அனுகிரஹத்தை பெறலாம் என, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ