உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் சச்சிதானந்த பள்ளி மாணவியர் முதலிடம்

ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் சச்சிதானந்த பள்ளி மாணவியர் முதலிடம்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், சி.பி.எஸ்.இ., தெற்கு மண்டலம்1, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 56 பள்ளிகளைச் சேர்ந்த, 1090 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டிகள் நேற்று நிறைவு பெற்றன. இதில் 14 வயது மாணவி யர் பிரிவில் நெய்வேலி ஜவகர் பள்ளி முதலிடத்தையும், மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி இரண்டாம் இடத்தையும், சென்னை ஐ.சி.எப்., வித்யா நிகேதன் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றது. 17 வயதிற்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் மேட்டுப்பாளையம் சச்சிதானந்த பள்ளி முதலி டத்தையும், ஹைதராபாத் டெல்லி பப்ளிக் பள்ளி இரண்டாம் இடத்தையும், கோவை அதியனா பன்னாட்டு பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றது. ஆறு பிரிவாக நடந்த போட்டிகளில், நான்கு பிரிவு போட்டிகளில் மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது. பரிசளிப்பு விழாவுக்கு பள்ளி செயலர் கவிதாசன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி. டாக்டர் கார்த்திகேயன், மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசு கோப்பை வழங்கி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி