உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சாடிவயல் யானைகள் முகாம் திறப்பு ஜனவரி இறுதிக்குள் யானைகள் வந்து விடும்

 சாடிவயல் யானைகள் முகாம் திறப்பு ஜனவரி இறுதிக்குள் யானைகள் வந்து விடும்

தொண்டாமுத்தூர்: சாடிவயலில், பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய, புதிய யானைகள் முகாம் திறக்கப்பட்டுள்ளது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் திறக்கப்பட்டுள்ள புதிய யானைகள் முகாமில், மேல்நிலை தண்ணீர் தொட்டி, உணவு தயாரிக்குமிடம், 2 கரால், 5 யானைகள் குளிப்பதற்கான ஷவர், 2 யானைகளுக்கான ஷெட், 18 புதிய ஷெட்கள், அதன் பின்புறம், யானையின் சாணத்தை சேகரித்து, மண்புழு உரம் தயாரிப்பதற்கான கிடங்கு உள்ளது. யானைகள் நீச்சல் குளம், 3 சிறிய குட்டைகள், அதனையடுத்து, யானைகளுக்கு தீவனம் பயிரிடும் இடம் உள்ளது. 40 சோலார் விளக்குகள், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதோடு, காட்டு யானைகள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில், முகாமை சுற்றிலும், அகழி மற்றும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. எப்போது யானைகள் வரும்? வனத்துறையினர் கூறுகையில், புதியதாக திறக்கப்பட்ட சாடிவயல் யானைகள் முகாமிற்கு, எம்.ஆர்.,பாளையத்தில் இருந்து யானைகளை கொண்டுவர வேண்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலரிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்ததும் யானைகள் கொண்டுவரப்படும். பெரும்பாலும், ஜனவரி மாத இறுதிக்குள் யானைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அதோடு, கும்கி யானைகளையும் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்,என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ