மேலும் செய்திகள்
மகன் இறந்த வேதனை: தந்தை தற்கொலை
17-Oct-2024
கோவை; ஏழு வயது மகன் இறந்த சோகத்தில் தாய், தந்தை இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.சிவகாசியை சேர்ந்த பழனிச்சாமி, 39. மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார். இவரின் மனைவி, வத்சலா, 35 ஐ.டி., ஊழியர். இவர்களுக்கு ஏழு வயதில் விஷ்ணு என்ற மகன் இருந்தான். இவர்கள் குடும்பத்துடன் கோவை வேடப்பட்டி பகுதியில் வசித்து வந்தனர்.கடந்த ஏழு மாதங்களுக்கு முன், விஷ்ணு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். இதனால், பழனிச்சாமி, வத்சலா மன உளைச்சலில் இருந்து வந்தனர். இந்நிலையில், காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள், அறையை திறந்து பார்த்தனர். அப்போது, இருவரும் வாயில் நுரையுடன் கிடந்துள்ளனர்.தகவலறிந்து, வந்த காட்டூர் போலீசார் அறையில் சோதனை மேற்கொண்டனர். 'எங்க சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. மகன் இறந்த சோகத்தில் இருந்த இருவரும் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிந்தது.
17-Oct-2024