காதலி இறந்த சோகம்; காதலன் தற்கொலை
தொண்டாமுத்துார்; கலிக்கநாயக்கன்பாளையம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் தனுஷ்,21; இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். அப்பெண், 2ம் தேதி, குடும்பத்துடன் கேரளாவுக்குச் சென்றிருந்தார். அங்கு, ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். காதலி இறந்த சோகத்தில், தனுஷ் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வீட்டுக்கு வந்த தனுஷ் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார். அதைப்பார்த்த பெற்றோர், என்ன ஆனது என கேட்டபோது, 'காதலி இல்லாதால், தனக்கும் வாழப்பிடிக்கவில்லை. மஞ்சள் நிற சாணிப்பவுடர் குடித்து விட்டேன்' என கூறியுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே தனுஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தொண்டாமுத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.