பாதுகாப்பான தீபாவளி
கோவை: பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், 'பாதுகாப்பான தீபாவளி' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நாடக வடிவில் நடத்தப்பட்டது. தீ விபத்துகள் ஏற்படாத வகையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள், பட்டாசு வெடித்த பிறகு செய்யக்கூடாதவை, குறித்தெல்லாம் சுவாரஸ்யமாக மாணவர்கள் நடித்துக் காட்டினர். பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், 'பட்டாசு வெடிக்கும் போது சிறிய கவனக்குறைவால் பெரிய விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாணவர்கள் மற்றும் குழந்தைகள் எப்போதும் பெரியவர்கள் கண்காணிப்பில் மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும்' என்றார்.