மேலும் செய்திகள்
திருக்கல்யாண திருவிழா
25-Mar-2025
அன்னுார்; குன்னத்தூராம்பாளையம், சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில் சிறப்பு வழிபாடு நடந்தது.குன்னத்தூராம்பாளையம், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில், கடந்த 23ம் தேதி கிராம சாந்தி நடந்தது. 24ம் தேதி காலை வேள்வி வழிபாடு, பிள்ளையார் வழிபாடு நடந்தது. கொடியேற்றப்பட்டது. மாலையில் அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது.நேற்று (31ம் தேதி) வரை தினமும் மாலையில் சிறப்பு வழிபாடு நடந்தது. சக்தி மாரியம்மனுக்கு அபிஷேக பூஜை அலங்கார பூஜை நடந்தது. இன்று (1ம் தேதி) கம்பம் நடப்படுகிறது. வரும் 8ம் தேதி இரவு அணிக்கூடை மற்றும் தீர்த்த குடம் எடுத்து வருதலும், கரகம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தலும் நடக்கிறது.வருகிற 9ம் தேதி காலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாவிளக்கு எடுத்தலும், பொங்கல் வைத்தலும், நடைபெறுகிறது. இரவு கம்பம் கலைக்கப்படுகிறது. வரும் 10ம் தேதி எருது விரட்டும் வைபவம் நடக்கிறது. இரவு அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனை நடக்கிறது.
25-Mar-2025