உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மண்டல போக்குவரத்து பணியாளர்களுக்கு சம்பளம் ஓகே

கோவை மண்டல போக்குவரத்து பணியாளர்களுக்கு சம்பளம் ஓகே

கோவை : தினமலர் செய்தி எதிரொலியாக, கோவை மண்டல போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு, நேற்று சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டது.கோவை மண்டல போக்குவரத்து அலுவலகத்தில், பணிபுரியும் பணியாளர்களுக்கு, இம்மாத சம்பளம் 12 நாட்களாகியும் வழங்கப்படாதது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, நேற்று பணியாளர்களின் வங்கிக்கணக்கிற்கு, மதியம் 1:00 மணியளவில் சம்பளம் வரவு வைக்கப்பட்டது. போக்குவரத்துத்துறை பணியாளர்கள் சிலர் மகிழ்ச்சியுடன் கூறுகையில், 'பண்டிகை நெருங்கும் நேரத்தில் 12 நாட்களாக சம்பளம் வழங்கப்படாததால், மிகவும் சிரமப்பட்டோம். உங்கள் நாளிதழில் விரிவாக செய்தி வெளியான பின், தற்போது சம்பளம் கிடைத்து விட்டது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை