உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  உப்பு விற்பவர்கள் பாலிதீன் தவிர்க்கலாம்

 உப்பு விற்பவர்கள் பாலிதீன் தவிர்க்கலாம்

கோவை: கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவில், உப்பு விற்பனை செய்பவர்கள் பாலிதீன் கவருக்கு பதிலாககாகிதகவரையோ, அலுமினிய பாயிலையோபயன்படுத்தலாம் என, ராக் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. வரும் 4ம் தேதி கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழா நடக்கிறது. விழாவுக்கு வரும் பக்தர்கள், கோயிலின் முகப்பில் உள்ள மூன்று கம்பத்துக்கு முன்னேயும், தேருக்கு முன்னேயும் உப்பும், மிளகும் சமர்ப்பித்து வழிபடுவர். உப்பை வழங்கும் கோயில் கடைக்காரர்கள், பாலிதீன் கவரில் வழங்குகின்றனர். அதற்கு பதிலாக பிரவுன் கவர் அல்லது அலுமினிய பாயில் கவரில் வழங்கலாம்.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பாலிதீன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி