உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமதா இஷ்டி சமத்துவ வேள்வி; வைணவ ஆச்சார்யர்கள் ஆலோசனை

சமதா இஷ்டி சமத்துவ வேள்வி; வைணவ ஆச்சார்யர்கள் ஆலோசனை

கோவை; சென்னையில் நடைபெறும் 'சமதா இஷ்டி சமத்துவ வேள்வி 'குறித்து கோவையில் வைணவ ஆச்சார்யர்கள் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். உலகில் அமைதி நிலவவும், நல்லிணக்கமாகவும் செழிப்பாகவும் மக்கள் வாழ்வதற்கு, சமதா இஷ்டி என்ற சமத்துவ வேள்வியை ஹைதராபாத்திலுள்ள உபய வேதாந்த ஆச்சார்ய பீடம் ஸ்ரீஸ்ரீ திரிதண்டி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் நடத்த முடிவு செய்துள்ளார். அனைத்து உயிரினங்களுக்கும் செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவையாகும். இந்த எண்ணம் வளரவும் வளர்க்கப்பட வேண்டும் என்று சுவாமி திருவுள்ளம் கொண்டு விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்துடன் சமத்துவ வேள்வியை நடத்த உள்ளார். இந்த வேள்வி சென்னை பெரம்பூரில் நவ., 6 முதல் 13 வரை நடக்கிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பி.எஸ்.ஜி., தொழில் நுட்ப கல்லுாரி அரங்கில் நேற்று நடந்தது. இதில் திருக்கோஷ்டியூர் மாதவ ராமானுஜ சுவாமிகள், காரமடை ஆச்சாரியர் ஸ்ரீதர்பட்டர் சுவாமிகள், ரேஸ்கோர்ஸில் செயல்படும் விகாஷா தரங்கினி அமைப்பு செயலாளர் ஷியாமளா வரதராஜன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டனர். திரளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை