உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதே சீட்... அதே வேலை! சஸ்பெண்ட் செய்த பிறகும்

அதே சீட்... அதே வேலை! சஸ்பெண்ட் செய்த பிறகும்

கோவை: 2021 அ.தி.மு.க. ஆட்சியில், மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டனர். நியமனத்தில் விதிமீறல் நடந்திருப்பதாக தூய்மை பணியாளர்கள் சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர். 54 பேரின் பணி உத்தரவு ரத்து செய்ய கோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவுப்படி ஆகஸ்ட் 14ம் தேதி 54 பேரை பணி நீக்கம் செய்து கமிஷனர் ரவி தேஜா ஆணை பிறப்பித்தார். பணி நீக்கம் செய்த சிலர், அவுட் சோர்ஸிங் முறையில் மீண்டும் மாநகராட்சிக்குள் நுழைந்துள்ளனர். துணை கமிஷனர் சரஸ்வதியின் நேர்முக உதவியாளராக இருந்தவர் விக்னேஷ். பணி நீக்கம் செய்த 54 பேரில் இவரும் ஒருவர். அதன் பிறகு மாநகராட்சி ஒப்பந்த நிறுவனம் அவரை பணிக்கு எடுத்தது. அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட பைல்களை பார்ப்பது மட்டுமே அவரின் பணி. அதற்கு மட்டுமே அவர் மாநகராட்சி அலுவலகம் வர வேண்டும். அப்படியில்லாமல் விக்னேஷ், இப்போதும் துணை கமிஷனரின் நேர்முக உதவியாளராகவே இருப்பதாக புகார் எழுந்தது. நேர்முக உதவியாளரின் இருக்கையில் அமர்ந்து பணி செய்வது, நேர்முக உதவியாளரின் அதிகாரபூர்வ மொபைலை கையாள்வது விக்னேஷ் தான் என்று மாநகராட்சி ஊழியர்கள் புகார் கூறினர். கண் துடைப்புக்காக, கோர்ட் தீர்ப்பை அமல்படுத்திவிட்டு மாநகராட்சியே விதிமீறலுக்கு துணை போகிறது. அதேநேரத்தில் மாநகராட்சியின் பணியை செய்வது கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். நமது நிருபர் மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜாவிடம் கேட்ட போது, ‘‘விக்னேஷை கடுமையாக எச்சரித்து உடனடியாக வெளியேற்றுகிறோம்’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

P. S. Prakash
நவ 01, 2026 13:09

இந்த வகை சீர்கேட்டை சிறுது சிறிதாக தான் சரி செய்ய முடியும், இவ்வகை குளறுபடிகளை களைய ஒவ்வொரு அரசு அலுவலககங்களிலும் பணியிலிருக்கும் அதிகாரிகள், நேரடி பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் பெயர் , பதவி விவரங்கள் அடங்கிய பலகையை வைக்கலாம்


Mani . V
நவ 01, 2026 04:53

இந்த துணை கமிஷனர் சரஸ்வதியை நிரந்தரப் பணி நீக்கம் செய்ய முடியாதா யுவர் ஹானர்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை