சங்கமேஸ்வரர் கோவில் விழா இனி ஆண்டுதோறும் நடக்கும்
கோவை; இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, பழமையும் புகழும் வாய்ந்த கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, 32 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாக நடந்தது. இனி ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் என, இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து , இந்து ஆலய பாதுகாப்பு இயக்க கோவை மாநகர பொதுசெயலாளர் முத்துகணேசன் கூறியதாவது:சங்கமேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா நடைபெற வேண்டும் என்ற சிவபக்தர்களின், 32 ஆண்டு கால வேண்டுதல் நிறைவேறியுள்ளது. கடந்த மே 4 அன்று சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து,ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றி, கோவில் தேரோட்டம் மிகவும் விமரிசையாக நடந்தது. இனி வரும் ஆண்டுகளிலும் சிறப்பாக நடைபெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.