மேலும் செய்திகள்
சத்யசாய் பஜன் நிகழ்ச்சி
08-Sep-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் சத்யசாய் பாபான், நுாற்றாண்டு விழா மற்றும் பொள்ளாச்சி சத்யசாய் சேவா சமிதியின் பொன்விழா நாளை நடக்கிறது. கோவை மாவட்ட சத்யசாய் சேவா நிறுவனங்கள் மற்றும் பொள்ளாச்சி சாய்மதுரம், சத்யசாய் சேவா சமிதி சார்பில், சத்யசாய் பாபாவின் நுாற்றாண்டு விழா, பொள்ளாச்சி சத்யசாய் சேவா சமிதியின் பொன்விழா நாளை (21ம் தேதி) நடக்கிறது. விழாவையொட்டி, திருவுருவபட ரத ஊர்வலம் மற்றும் சாய் கனாம்ருதம் என்ற பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது. ரத ஊர்வலம், சாய் மதுரத்தில் இருந்து மாலை, 4:05 மணிக்கு புறப்பட்டு, கே.கே.ஜி. திருமண மண்டபத்தில் நிறைவு பெறுகிறது.தொடர்ந்து, மாலை, 5:45 மணி முதல், இரவு, 7:35 மணி வரை சாய் கானாம்ருதம் நடக்கிறது.
08-Sep-2025