கல்வி உதவி தொகை வழங்கும் விழா
மேட்டுப்பாளையம்: காரமடையை அடுத்த வெள்ளியங்காடு அருகே, முத்துக்கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. குழுவின் தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். 13 மாணவ, மாணவிகளுக்கு, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், செந்தில் குரூப் தலைவர் ஆறுமுகசாமி, சச்சிதானந்த பள்ளி செயலர் கவிதாசன் ஆகியோர், கல்வி உதவித் தொகை வழங்கி பேசினர்.விழாவில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் அருள் சிவா ஏற்புரை வழங்கினார்.