உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கூட்டுறவு வார விழாவில் பள்ளி மாணவிக்கு பரிசு

 கூட்டுறவு வார விழாவில் பள்ளி மாணவிக்கு பரிசு

கிணத்துக்கடவு: அனைத்திந்திய, 72வது கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி கோவை ராமலிங்க கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடந்தது. இதில், பேச்சு, ஓவியம், கட்டுரை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது. இதில், கோவை மாவட்ட அளவில் பல்வேறு அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினார்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவை எம்.பி., ராஜ்குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கிணத்துக்கடவு வட்டாரத்திற்கு உட்பட்ட மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி அருஷ்யாபர்வீன் (6ம் வகுப்பு), பேச்சுப்போட்டியில் முதல் இடம் பெற்றார். இதற்கான சான்றிதழ் மற்றும் கோப்பையை மாவட்ட கலெக்டர் வழங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மயிலாத்தாள், பள்ளி ஆசிரியர்கள் மாணவியை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ