உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மாணவியருக்கு கிரீடம் சூட்டி பாராட்டு

பள்ளி மாணவியருக்கு கிரீடம் சூட்டி பாராட்டு

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஏழு மாணவியர், எட்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயில செல்கின்றனர். நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவியரை பாராட்டி, பிரிவு உபசார விழாவாகவும், உயர்கல்வி பயில வழிகாட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் கணேசன், மாணவியருக்கு கிரீடம் சூட்டி நினைவுப்பரிசுகள் வழங்கி பாராட்டியதுடன், உயர்கல்வி பயில வழிகாட்டும் வகையில் ஆலோசனைகளை வழங்கினார்.மாணவி தமிழரசி, மாநில அளவில் இன்ஸ்பையர் விருது பெற்றார். ேஹமலதா, தீபிகா, பிரியதர்ஷினி ஆகியோர் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றனர். மாணவியர் தரணி, தர்ஷனா ஆகியோர் வகுப்பறை மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர் என ஆசிரியர்கள் பாராட்டினர்.மாணவியருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. 6, 7ம் வகுப்பு மாணவர்களும், மாணவியருக்கு நினைவுப்பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை