மேலும் செய்திகள்
ரிக் ஷா கவிழ்ந்து மாணவி உயிரிழப்பு
24-Sep-2025
போத்தனுார்; கோவை, குனியமுத்துார் அடுத்து சுகுணாபுரம் மேற்கு, மாட்டுக்கார சாமி கோவில் வீதியை சேர்ந்தவர் தனபால். மனைவி சாந்தி, 48. இவரது மகள் கானஸ்ரீ, 24, ஓராண்டுக்கு முன் பிரதீப் என்பவருடன் திருமணமாகி, கருமத்தம்பட்டி அருகே வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன், தாய் வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த, 6ம் தேதி அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க தாய் சாந்தியுடன், ஸ்கூட்டரில் குனியமுத்துார் அருகே உள்ள ஓட்டலுக்குச் சென்றார். பின், சாந்தியின் வீட்டருகே வசிக்கும் ரங்கராஜ் என்பவரின் மகள் அக் ஷயா (கல்லூரி இறுதியாண்டு மாணவி), 21, என்பவரையும் அழைத்துக் கொண்டு, கோவை - - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். பி.கே.புதுார் பஸ் ஸ்டாப் அடுத்து, 250 மீட்டர் தொலைவில் ஸ்கூட்டர் சாலை மைய தடுப்பில் அடுத்தடுத்து மோதியது. இதில், மூவரும் துாக்கி வீசப்பட்டனர். தெருவிளக்கு கம்பத்தில் கானஸ்ரீ மோதியதில், தலையில் படுகாயம் அடைந்தார். சாந்திக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக் ஷயா காலில் காயத்துடன் தப்பினார். அவ்வழியே வந்தோர் மூவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த டாக்டர்கள் கானஸ்ரீ உயிரிழந்து விட்டதாக கூறினர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சாந்தி மறுநாள் உயிரிழந்தார். அக் ஷயா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். தாய், மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
24-Sep-2025