மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் திரண்ட பக்தர்கள்
19-Jul-2025
கோவை; ஆடி இரண்டாவது வார வெள்ளிவிழாவை முன்னிட்டு, ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள், தங்ககவசம் ஊதாநிற மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியருளினார். மங்கள தீபாராதனைக்குப்பின்பு பக்தர்களுக்கு மாங்கல்ய சரடு, குங்குமம், மஞ்சள், வளையல் ரவிக்கை உள்ளிட்ட மங்கல பொருட்களை வழங்கப்பட்டன. ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தங்கக்குடையின் கீழ் சிகப்பு பட்டுச்சேலை, செவ்வந்தி, ரோஜா, சம்பங்கி, தாமரை, ஊதாநிற மல்லிகை மற்றும் அழகிய கொய்மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியருளினார். கோவில் மண்டபம், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். சுமங்கலி பெண்களுக்கு பிரசாதமும் வளையலும் வழங்கப்பட்டது. கவுண்டம்பாளையம் ஸ்ரீ பரஞ்ஜோதிமாரியம்மன் கோவிலில் காய்கறி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கண்ணப்ப நகர் தயிர் இட்டேரி தண்டு மாரியம்மன் கோவிலில் குங்கும அலங்காரத்திலும், மேட்டுப்பாளையம் சாலை அம்பேத்கார் நகரிலுள்ள ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவிலில் சந்தன காப்பு அலங்காரத்திலும், சரவணம்பட்டி பத்ரகாளியம்மன் ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்திலும், கவுண்டம்பாளையம் பரஞ்ஜோதி மாரியம்மனுக்கு 100 கிலோ எடை காய்கறியில் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.
19-Jul-2025