மேலும் செய்திகள்
4 ஆண்டுகளில் 13 ஆயிரம் விதை மாதிரிகள் சோதனை
21-May-2025
கோவை: கோவை, விதைப் பரிசோதனை நிலையத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், 41 ஆயிரத்து 233 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 2140 விதை மாதிரிகள் தரமற்றவை என, கண்டறிந்து தடைசெய்யப்பட்டுள்ளது.இது குறித்து, கோவை விதைப் பரிசோதனை மைய உதவி இயக்குனர் நர்க்கிஸ் கூறியிருப்பதாவது:கோவை தடாகம் ரோட்டில் இயங்கி வரும், விதைப் பரிசோதனை மையம் விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விதை விற்பனையாளர்களுக்கு, விதைப் பரிசோதனை செய்து கொடுத்து, தரமான விதை கிடைப்பதை, உறுதி செய்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், இம்மையத்தில், 41 ஆயிரத்து 233 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 2140 விதை மாதிரிகள் தரமற்றவை என தடைசெய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கு தகுதியான, ஆரஞ்சு நிற மற்றும் நீலநிற விதைக்குவியல் சான்றிதழ்கள் வழங்கும் தகுதியை இந்த மையம் பெற்றுள்ளது. விதை ஏற்றுமதியாளர்கள், விதைகளை வெளிநாட்டுக்கு எளிதாக ஏற்றுமதி செய்வதற்கும், விதைகளின் தரத்தை சர்வதேச அளவுக்கு உறுதி செய்யும், தரச்சான்றிதழ்களை வழங்கி வருகிறது.இதுவரை, கோவை விதைப் பரிசோதனை மையத்தின் மூலம், 102 சர்வதேச விதை தரச்சான்றிதழ்கள் விதை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
21-May-2025