| ADDED : ஜன 19, 2024 12:00 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் மரக்கன்று வழங்கப்படுகிறது.கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதிகளே அதிகம். இங்குள்ள விவசாயிகளுக்கு, கிணத்துக்கடவு வேளாண் துறை சார்பில், வேளாண் காடுகள் திட்டத்தின் வாயிலாக மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.இதில், தேக்கு - 11 ஆயிரம் மரக்கன்றுகள், மகாகனி - 2,125, செம்மரம் - 1,250 மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம், 400 மரக்கன்றுகள் வரை வழங்கப்பட உள்ளது. மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களான சிட்டா மற்றும் ஆதார் நகல் போன்றவைகளை வேளாண் அலுவலகத்தில் சமர்ப்பித்து பெற்று கொள்ளலாம்.மேலும், கூடுதல் தகவல்கள் அறிய அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் தெரிவித்தனர்.