உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 50 சதவீத மானியத்தில் விதைகள், இடுபொருட்கள்

50 சதவீத மானியத்தில் விதைகள், இடுபொருட்கள்

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டத்தில் விதைகள் மற்றும் இடுபொருட்கள், விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.இதுகுறித்து, கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணவேணி கூறியிருப்பதாவது:கோவை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை கீழ் 2025--2026 ம் ஆண்டுக்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருட்களை, விதை கிராம திட்டம், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.சித்திரை பட்டத்திற்கு தேவையான நுண்ணூட்டக் கலவைகள், உயிர் உரங்கள், சோள விதைகள், நெல் விதைகள் போன்றவைகள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படுகிறது. தற்போது கோவை மாவட்டத்தில் நெல் 3,850 கிலோ, சோளம் - 12,183 கிலோ, கம்பு - 1,556 கிலோ, உளுந்து -18,779 கிலோ, பச்சைப் பயறு- 1,210 கிலோ, தட்டைப் பயறு 2,004 கிலோ, நிலக்கடலை 18,939 கிலோ விதைகள் இருப்பில் உள்ளன.கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இடுபொருட்களின் இருப்பு நிலையினை உழவர் செயலியின் மூலமாக பார்த்துக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ