உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒலி மாசு ஏற்படுத்தும் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

ஒலி மாசு ஏற்படுத்தும் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வாகனங்களில் விதிமீறி பொருத்தப்பட்டிருந்த 'ஏர் ஹாரன்'களை பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு வார கடைபிடிக்கப்பட்டு வடுகிறது. இதனையடுத்து, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.அதன் ஒரு கட்டமாக, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பஸ் ஸ்டாண்டிற்கு வந்த அரசு மற்றும் தனியார் பஸ்களில், அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டு இருந்த, 'ஏர்ஹாரன்'கள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.தொடர்ந்து, பஸ்களில், ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில், அரசு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் உள்ள 'ஏர்ஹாரன்'கள் பயன்படுத்தக் கூடாது என, பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை