உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது

மண் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது

கோவை; கனிம மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் டிரைவரை கைது செய்தனர்.கோவை, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு 'ஒய்'ஜங்ஷன் சந்திப்பு பகுதியில், அனுமதியின்றி தடை செய்யப்பட்ட கனிமவள மண் கடத்திச் செல்வதாக கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து கனிம வளத்துறை மற்றும் புள்ளியியல் துறை சிறப்பு தாசில்தார் கணேசன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக ஒரு லாரி வந்தது. அதை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மூன்று யூனிட் கனிம மண் கடத்தப்படுவது தெரிந்தது. இதையடுத்து மண்ணுடன் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து துடியலூர் போலீசாரிடம் சிறப்பு தாசில்தார் வசந்த குமார் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் லாரி டிரைவர் சூலூர் எருக்கல காட்டு தோட்டத்தை சேர்ந்த வசந்தகுமார், 27 என்பவரை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை