மேலும் செய்திகள்
ஜல்லி, மண் கடத்தல்4 லாரிகள் பறிமுதல்
13-Feb-2025
கோவை; கோவை மசக்காளிபாளையம், ஏ.கே.ஜி.நகர் பகுதியில், கனிம மண் கடத்தப்படுவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில், கனிமவளத்துறை மற்றும் புள்ளியியல் துறை சிறப்பு தாசில்தார் கணேசன் தலைமையிலான சிறப்புக்குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரிகளில், சோதனை நடத்திய போது அவற்றில் கனிம மண் சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்டது தெரிந்தது. இரு டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர். சிறப்பு தாசில்தார் கணேசன் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்த சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Feb-2025