ரேஷன் கார்டுதாரர்களின் சுய விபரம் பதிவு துவங்கியது
கோவை; கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் தங்களின் சுய விபரங்களை இகேஒய்சி மூலம் பதிவு செய்ய வேண்டும் என, கலெக்டர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் ரேஷன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, கோவை மாவட்ட வழங்கல்அலுவலர் ஜீவரேகா கூறியதாவது:கோவையில் உள்ள ரேஷன்கடைகளில் பொருட்கள் வாங்கும் அனைத்து கார்டுதாரர்களும் இகேஒய்சி பதிவு செய்யவேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த பணியை விரைந்து முடிக்க அனைத்து தாசில்தார் அலுவலகங்களுக்கும் சர்குலர் அனுப்பப்பட்டு, நேற்று முதல் பணி நடந்து வருகிறது.குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்கள் முழு விபரம், மொபைல் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும் என, ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.