மேலும் செய்திகள்
பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
28-Apr-2025
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
17-May-2025
கோவை; கோவை, செல்வபுரம் பேரூர் மெயின் ரோடு எல்.ஐ.சி., காலனி அருகே இரு தரப்பினர் தகராறில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற செல்வபுரம் போலீசார், அவர்களிடம் விசாரித்தனர். முன் விரோதத்தில் இந்த தகராறு எழுந்ததாக தெரிந்தது. இதனையடுத்து பொது அமைதிக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக, செல்வபுரம் தில்லை நகரை சேர்ந்த ரகுபதி, 28, மாதேஷ்வரன், 29, சி.ஜி.வி.,நகரை சேர்ந்த பிரவீன், 23, கெம்பட்டி காலனியை சேர்ந்த மனோஜ், 29, மற்றொரு தரப்பை சேர்ந்த, செல்வபுரம் பெரியதம்பி நகரை சேர்ந்த முகமத் ஆசிப், 22, அப்சல், 22 ஆகிய ஆறு பேர் மீது, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
28-Apr-2025
17-May-2025