மேலும் செய்திகள்
சி.ஏ., மாணவர்களுக்காக 'சிந்தனை செய்' கருத்தரங்கு
28-Jun-2025
கோவை; கிக்கானி கல்வி நிறுவனங்கள் சார்பில், 'வித்யாப்யாசம் 3.0' என்ற தலைப்பில், கல்வி கருத்தரங்குநடத்தப்பட்டது.இன்றைய மாணவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தவும், கல்வி பற்றிய சிந்தனையை மேம்படுத்தவும், இந்த கருத்தரங்கு நடந்தது.கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக, இந்திய ராணுவஅதிகாரிலெப்டினன்ட் ஜெனரல் ராஜன் ரவீந்திரன் பங்கேற்றார்.நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக, ராணுவ சேவை ஆற்றியவர், ராணுவசேவை பற்றி விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தினார்.அவர் பேசுகையில், ''ராணுவ பலமே ஒரு நாட்டின் முதுகெலும்பு. ராணுவ பலம் வாய்ந்த நாட்டில் தான் மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும். ராணுவ சேவை உடல் மட்டுமல்ல, மனவலிமையும் சார்ந்தது. தலைமைத்துவம், ஒழுக்கம் மற்றும் தேச பக்தி உணர்வுகளைமாணவர்களிடையே, வளர்க்க வேண்டும்,'' என்றார்.
28-Jun-2025