உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செஞ்சுருள் சங்கம் அறிமுக விழா

செஞ்சுருள் சங்கம் அறிமுக விழா

தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் அரசு கலை அறிவியல் கல்லுாரி சார்பில், செஞ்சுருள் சங்கத்தின் அறிமுக விழா நேற்று கல்லுாரி அரங்கத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொ) செல்வம் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பரிசோதனை மற்றும் ஆலோசகர்கள் நித்யா மற்றும் மீனாட்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த போட்டி நடத்தப்பட்டது. செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் வேதா நன்றி கூறினார். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை