உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுாறு நாள் திட்டத்தில் பல கோடி ரூபாய் நிலுவை

நுாறு நாள் திட்டத்தில் பல கோடி ரூபாய் நிலுவை

அன்னுார்; 'நூறு நாள் திட்டத்தில் பொருட்கள் வழங்கிய வகையில், பல கோடி ரூபாய் நிலுவை உள்ளது,' என முன்னாள் ஊராட்சி தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஊராட்சிகள் உள்ளன. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், பல கோடி ரூபாயில் பணிகள் நடக்கின்றன. இதில் கான்கிரீட் சாலை, சுய உதவி குழு கூட்டமைப்பு கட்டடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.இத்திட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்ததற்கான சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. எனினும் இத்திட்டத்திற்கு கம்பி, செங்கல், எம். சாண்ட் உள்ளிட்ட பொருட்களை வழங்கிய வகையில் பல ஊராட்சிகளில் நிலுவை இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பணி செய்து முடிக்கப்பட்டு விட்டது. பணி முடிந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இத்திட்டத்தில் செய்யப்பட்ட பணிகளுக்கு தொழிலாளர்களின் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.பணிகளுக்கு வழங்கப்பட்ட பொருட்களுக்கான தொகை தரப்படவில்லை. இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். அடுத்த வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் சமர்ப்பித்து எடுத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே அரசு விரைவில் 100 நாள் திட்டத்தில் வழங்கப்பட்ட பொருட்களுக்கான தொகையை விடுவிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ