உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதாள சாக்கடையில் வழியும் கழிவுநீர்; வாகன ஓட்டுநர்கள் அவதி

பாதாள சாக்கடையில் வழியும் கழிவுநீர்; வாகன ஓட்டுநர்கள் அவதி

புதரால் இடையூறு

வடசித்தூர் - நெகமம் ரோட்டில், கோப்பனூர்புதூர் அருகே பெயர் பலகையில் செடிகள் படர்ந்து பாதி மறைத்த நிலையில் உள்ளது. இதை ஊராட்சி நிர்வாகம் கவனித்து, அப்பகுதியில் வளர்ந்துள்ள புதர் செடிகளை அகற்றி, பெயர் பலவையை சுத்தம் செய்ய வேண்டும்.- -தங்கவேல், நெகமம்.

'பார்க்கிங்' இடமில்லை

வால்பாறை நகரில், பல இடங்களில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்ய இடம் இல்லாததால், கடைகள் முன் மற்றும் ரோட்டோரத்தில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு போக்குவரத்து போலீசார் விரைவில் தீர்வு காண வேண்டும்.- -விகாஸ், வால்பாறை.

ரோடு படுமோசம்

பொள்ளாச்சி, ராஜாமில் ரோட்டில் ஆங்காங்கே குழி ஏற்பட்டுள்ளது. இதனால், இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, ரோட்டை சீரமைக்க செய்ய வேண்டும்.- -டேவிட், பொள்ளாச்சி.

ரோட்டில் மழைநீர்

பொள்ளாச்சி, கள்ளிபாளையம் ரோட்டின் ஓரத்தில், மழை நீர் அதிக அளவு வழிந்தோடுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் இந்த வழியாக தடுமாறி சென்று வருகின்றனர். எனவே, வடிகால் வசதி ஏற்படுத்தி, ரோட்டில் மழைநீர் செல்லாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.-- -கண்ணன், பொள்ளாச்சி.

திறந்தவெளியில் குப்பை

பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், அரசம்பாளையம் பிரிவு அருகே ரோட்டின் ஓரத்தில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, ரோட்டின் ஓரத்தில் பெரிய அளவிலான குப்பை தொட்டி வைக்க வேண்டும்.-- -முத்துக்குமார், கிணத்துக்கடவு.

ஓட்டுநர்கள் அவதி

பொள்ளாச்சி, கோட்டூர் ரோட்டில் மாரியம்மன் கோவில் பின்பக்கம், பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழியில் இருந்து, கழிவுநீர் பொங்கி வெளியேறுகிறது. அங்கு, பேரிகார்டு வைத்து தடுப்பு அமைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். பாதாள சாக்கடையை சீரமைத்து, குறுகலான ரோட்டிலுள்ள பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.-- குப்புசாமி, பொள்ளாச்சி.

வாகனங்கள் ஆக்கிரமிப்பு

உடுமலை, பி.வி., கோவில் வீதியில் இரண்டு சக்கர வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலாகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை தீர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மூர்த்தி, உடுமலை.

வேகத்தடை வேண்டும்

உடுமலை, கங்காதரன் லே - அவுட்டில் வாகனங்கள் செல்லும் பிரதான ரோட்டின் வளைவுகளில் வேகத்தடை இல்லாமல் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனால், பொதுமக்கள், பாதிக்கப்படுகின்றனர். எனவே, அங்கு நகராட்சி சார்பில் வேகத்தடை அமைக்க வேண்டும்.- ஜெகநாதன், உடுமலை.

போக்குவரத்து நெரிசல்

உடுமலை -- திருப்பூர் ரோட்டில் வாகனங்கள் விதிமுறைகளை கடைபிடிக்காததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- செல்வம், உடுமலை.

நிழற்கூரை இல்லை

உடுமலை, வாளவாடி பிரிவு ரோட்டில் உள்ள, பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை வசதி இல்லை. இதனால் பயணியர் அருகிலுள்ள கடைகளில் காத்திருக்கின்றனர். மேலும் மழைகாலத்தில் நிழற்கூரை இல்லாமல் பயணிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சோமசுந்தரம், வாளவாடி.

ரோட்டை சீரமைக்கணும்

உடுமலை பஸ் ஸ்டாண்டில், ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், பஸ்கள் செல்லும் போது திணற வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலுள்ள ரோட்டை சரிசெய்ய நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முருகன், உடுமலை.

வடிகால் வசதியில்லை

உடுமலை கொழுமம் ரோட்டில், போதிய வடிகால் வசதி இல்லை. மழை பெய்தால், தண்ணீர் முழுவதும் ரோட்டில் தேங்கி விடுகிறது. வாகனங்களும் செல்ல முடியாமல் திணற வேண்டியதுள்ளது. எனவே, நகராட்சியினர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.- கந்தசாமி, உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ