ஆளிறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதியில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சியில் குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆள் இறங்கும் குழிகள் சேதம், கழிவுநீர் வெளியேறுவது போன்ற பிரச்னைகளால் மக்கள் சிரமப்படுகின்றனர்.அதில், பாலகோபாலபுரம் வீதியில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. கழிவுநீர் பொங்கி ரோட்டில் செல்வதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'அதிகளவு கழிவுநீர் வெளியேறுவதால், துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியை கடந்து செல்வதே சிரமமாக உள்ளது. ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.