உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / படகு இல்லத்தில் கழிவு நீர்; சுகாதாரம் பாதிப்பு! சுற்றுலா பயணியர் அதிருப்தி

படகு இல்லத்தில் கழிவு நீர்; சுகாதாரம் பாதிப்பு! சுற்றுலா பயணியர் அதிருப்தி

வால்பாறை; வால்பாறையில் உள்ள, படகு இலத்தில் கழிவு நீர் தேங்கியுள்ள நிலையில், படகு சவாரி செய்வதால், சுற்றுலா பயணியர் அதிருப்தியடைந்துள்ளனனர்.வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் பொழுதுபோக்குக்காக, நகராட்சி சார்பில் படகுசவாரி துவங்கப்பட்டுள்ளது. படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணியருக்கு கட்டணமாக, 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், படகுஇல்லத்தில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில், குடியிருப்பு பகுதி மற்றும் கடைகளில் வெளியாகும் கழிவு நீர், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் சங்கமிக்கின்றன. இதனால் கழிவு நீரில் சுற்றுலா பயணியர் படகு சவாரி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.படகுஇல்லத்தில் தேங்கி நிற்கும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும், என, நகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.சுற்றுலா பயணியர் கூறியதாவது:வால்பாறையில் உள்ள, அம்மா படகு இல்லத்தில் சாக்கடை கழிவு நீருடன் கழிவுகளும் தேங்கி நிற்கின்றன. இதனால், படகுசவாரியில் செல்லவே அச்சமாக உள்ளதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சுற்றுலா பயணியர் நலன் கருதி, நகராட்சி சார்பில் படகு இல்லத்தில் தேங்கியுள்ள குப்பை உள்ளிட்ட கழிவுகளை உடனடியாக அகற்றி, தண்ணீர் மாசுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், படகுஇல்லத்திலும், நகராட்சி பூங்காவிலும் சுற்றுலா பயணியருக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.இவ்வாறு, கூறினர்.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறை படகுஇல்லத்தில், தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றும் பணி விரைவில் துவங்கப்படும். வால்பாறை காமராஜ்நகர், கக்கன்காலனி, சிறுவர்பூங்கா உள்ளிட்ட ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள், வீடுகளில் வெளியாகும் கழிவு நீரை ஆற்றில் விடக்கூடாது. குப்பை உள்ளிட்ட கழிவுகளை ஆற்றில் வீசுவதை தவிர்த்து, துாய்மை பணியாளர்களிடம் நேரில் வழங்க வேண்டும். படகுசவாரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மாசுபடாமல் இருக்க, பொதுமக்கள் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ