உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதர் சூழ்ந்த நிழற்கூரை; மக்கள் அதிருப்தி

புதர் சூழ்ந்த நிழற்கூரை; மக்கள் அதிருப்தி

நெகமம்; நெகமம், ஆண்டிபாளையம் பயணியர் நிழற்கூரையை சுற்றிலும் புதர் வளர்ந்திருப்பதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வடசித்தூர் --- நெகமம் வழித்தடத்தில், ஆண்டிபாளையத்தில் உள்ள பயணியர் நிழற்கூரையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது நிழற்கூரை முன்பாக அதிகளவில் புதர் மண்டி காட்சியளிக்கிறது. இதனால், பூச்சி மற்றும் கொசுத்தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர். நிழற்கூரையை பயன்படுத்துவதை தவிர்த்து ரோட்டோரம் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் வெயிலால் மக்கள் பாதிக்கின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி, நிழற்கூரையை சுற்றிலும் வளர்ந்திருக்கும் புதரை அகற்றி, துாய்மையைாக பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி