உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சங்கர் ஐ.ஏ.ஏஸ்., அகாடமி மாணவர்கள் சாதனை

சங்கர் ஐ.ஏ.ஏஸ்., அகாடமி மாணவர்கள் சாதனை

கோவை; தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, குரூப் - 1 தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. தமிழக அளவில் மொத்தம் 190 தேர்வர்கள் நேர்முகத் தேர்வில் பங்கு பெற்றனர். இதில்,சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் பயிற்சி பெற்ற, 121 மாணவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கு பெற்றனர்.தேர்வு முடிவுகளில், முதல் 10 ரேங்குகளில், ஐந்துஇடங்களை சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி மாணவர்கள் பிடித்துள்ளனர். முதல் ரேங்கை கதிர் செல்வியும், மூன்றாவது ரேங்கை ஹரி பிரியங்காவும் பெற்றுள்ளனர்.சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி கோவை கிளை தலைவர் அருண் செந்தில்நாதன் கூறுகையில், ''கோவை கிளை மாணவர்களான லார்சன் இஸ்ரேல் ஏழாவது ரேங்க், மது வர்ஷினி 11வது ரேங்க், ஹர்ஷா உண்ணி 13வது ரேங்க் பெற்றுள்ளனர். குரூப் ஒன்றும் மற்றும் இரண்டுதேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்.,14 முதல் கோவை கிளையில் தொடங்கப்படவுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 73059 51898,98407 02761 ஆகிய, எண்களில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ