ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை
அன்னூர் : அன்னூர் வார சந்தையில், நேற்று ஒரே நாளில், ஒரு கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை நடந்தது.அன்னூரில் சனிக்கிழமை தோறும், வார சந்தை கூடுகிறது. இதில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஆடு வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள், அதிக எண்ணிக்கையில், ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.வரும் 7ம் தேதி, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நேற்று வார சந்தையில் மேட்டுப்பாளையம், திருப்பூர் மற்றும் கோவை நகரை சேர்ந்த, இறைச்சி கடை உரிமையாளர்கள் உட்பட பலர் ஆடுகள் வாங்க வந்திருந்தனர்.குறைந்தபட்சம் ஆட்டுகுட்டிகள் 5,000 ரூபாய்க்கு விற்பனையானது. பெரிய ஆடுகள் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகள் விற்கப்பட்டன. ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல், ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.