/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சோலையாறு டேம் ரோடு விரிவாக்க பணி துவக்கம் தினமலர் செய்தி எதிரொலி
சோலையாறு டேம் ரோடு விரிவாக்க பணி துவக்கம் தினமலர் செய்தி எதிரொலி
வால்பாறை, ;'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, சோலையாறுடேம் செல்லும் ரோடு விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது.வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் சோலையாறு டேம் பகுதிக்கு செல்கின்றனர். ஆனால், வால்பாறையிலிருந்து சோலையாறுடேம் செல்லும் ரோட்டில் பல இடங்களில் குறுகலான வளைவுகள் உள்ளன.இந்த வளைவுகளால் வேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக, வழித்தடத்தில் உள்ள ஸ்டேன்மோர் வளைவு மிகவும் குறுகலாக உள்ளதால், அதிக விபத்து ஏற்படுகிறது. இதுபற்றி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதனையடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, குறுகலான வளைவில் உள்ள ரோட்டை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.