உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழக்கடைக்காரரை தாக்கி பணம் பறிப்பு

பழக்கடைக்காரரை தாக்கி பணம் பறிப்பு

கோவை; பழக்கடைக்காரரை தாக்கி பணம் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை ரத்தினபுரி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஜெயகுமார், 62. சிவானந்தா காலனி பகுதியில் தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் பழம் வேண்டும் என்றார். கடை மூடியதால் பழம் இல்லை எனத் தெரிவித்தார். மேலும், மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு ஜெயகுமார் மறுப்பு தெரிவித்தார். அந்நபர் கத்தியை காட்டி மிரட்டி, ஜெயகுமார் சட்டைப்பையில் இருந்த ரூ.500 ஐ பறித்துக் கொண்டு சென்றார்.ஜெயகுமார் ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் பணப்பறிப்பில் ஈடுபட்ட, அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, 30 என்பவரை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை