உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுமைய சிலம்ப போட்டி; கஞ்சம்பட்டி பள்ளி வெற்றி

குறுமைய சிலம்ப போட்டி; கஞ்சம்பட்டி பள்ளி வெற்றி

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கஞ்சம்பட்டி அரசுப்பள்ளி மாணவர்கள், சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ச்சி பெற்றனர். பொள்ளாச்சி அருகே சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கிழக்கு குறுமைய விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. அதில், சிலம்ப போட்டியில் பங்கேற்ற கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 14வயது பிரிவில் ஆல்பர்ட், யாதவ் முதலிடமும், நித்யா இரண்டாம் இடமும் பிடித்தனர். 17 வயது பிரிவில், பரத், தேசிகன், மெர்லின் சாரா, ரக்சனா, அன்னபூரணி ஆகியோர் முதலிடமும், அபிமன்யூ, பூஜாஸ்ரீ ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் முரளிதரன், பயிற்சியாளர் கற்பக சோலை ராஜா ஆகியோரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி