உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுமைய விளையாட்டு போட்டி; காந்திஜி அரசு பள்ளி அசத்தல்

குறுமைய விளையாட்டு போட்டி; காந்திஜி அரசு பள்ளி அசத்தல்

அன்னுார்; குறுமைய விளையாட்டுப் போட்டியில், சொக்கம்பாளையம் அரசு பள்ளி அதிக இடங்களை வென்றுள்ளது. சர்க்கார் சாமக்குளம் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டி சின்னவேடம்பட்டியில் கடந்த வாரம் நடந்தது. இதில், சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி அதிக இடங் களை வென்று கல்வி மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேசைப்பந்து போட்டியில், 14 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், தன ஸ்ரீ, நிரஞ்சனா முதலிடமும், 17 வயதுக்கு உட்பட்ட போட்டியில், ரிதன்யா, மேனகா ஸ்ரீ முதல் இடமும் வென்றனர். தடகளப் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 600 மீ. ஓட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவி நிவேதிதா முதலிடம் வென்றார். ஒன்பதாம் வகுப்பு மாணவி அனுஷ்கா 80 மீ. தடை ஓட்டத்தில் இரண்டாம் இடமும், 200 மீ. ஓட்டத்தில் இரண்டாம் இடமும், 100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளார். 17 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், நீளம் தாண்டுதலில், சஞ்சய் ரித்திக் முதலிடம் பெற்றார். மும்முறை தாண்டும் போட்டியில் இவர் இரண்டாம் இடம் பெற்றார். இப்பள்ளி மாணவர் ஹரிஷ் 100 மீ. ஓட்டத்தில் மூன்றாம் இடமும், 200 மீ. ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளார். சாதித்த, மாணவ, மாணவியருக்கு, தலைமை ஆசிரியை லோகாம்பாள், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரகாந்தி, அனிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்த னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ