வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எந்த மே மாதம்?
மேலும் செய்திகள்
கிடப்பில் போடப்பட்டுள்ளமழை நீர் வடிகால் பணி
28-Mar-2025
கோவை: கோவை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலப் பணியை, மே மாதத்துக்குள் முடிக்க, நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.ஒண்டிப்புதுாரில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ்., காலனிக்குச் செல்ல, 2013ல், 27 துாண்களுடன் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி, மாநில நெடுஞ்சாலைத்துறையால் (கிராமச்சாலைகள்) துவக்கப்பட்டது. அணுகு சாலைக்கு இடம் ஒதுக்காமல், 30 அடி அகலத்துக்கு மேம்பாலம் கட்ட ஆரம்பித்ததால், அப்பகுதி பொதுமக்கள், ஐகோர்ட்டுக்குச் சென்றனர். இதனால், மேம்பால வேலை பாதியில் நின்றது. நில உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி, இழப்பீடு வழங்கப்பட்டது.அதன்பின், மீதமுள்ள பணிகளை செய்வதற்கு திருத்திய மதிப்பீடு தயாரித்து, நிதி ஒதுக்கப்பட்டது. 2023ம் ஆண்டு இறுதியில் மீண்டும் வேலை துவக்கப்பட்டது; 2024 ஜூலை வரை அவகாசம் வழங்கப்பட்டது; அதற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், 'டிரான்ஸ்பர்' இட மாற்றம் செய்வது, மின் கம்பங்களை அகற்றிவிட்டு, புதைவடமாக கொண்டு செல்வது, மழை நீர் வடிகால் கட்டுவது உள்ளிட்ட பணிகளால் தாமதமாகின. அதனால், ஆக., மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அக்காலகட்டத்துக்குள் நெடுஞ்சாலைத்துறையினரால் வேலையை முடிக்க முடியவில்லை. கொடுக்கப்பட்ட அவகாசம் முடிந்து, ஏழு மாதங்களாகி விட்டன. 'ரேம்ப்' மற்றும் மழை நீர் வடிகால் கட்டப்படவில்லை. மேம்பாலத்தில் மின் விளக்குகள் இன்னும் பொருத்தப்படவில்லை.'ரேம்ப்' கட்டும்போது, அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போர் வாகனங்களில் வளியே வர முடியாத சூழல் ஏற்படும். அதனால், அணுகுசாலை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு, 'ரேம்ப்' அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அருகில், பள்ளிக்குச் செல்லும் வழித்தடத்தில், மழை நீர் வடிகால் கட்ட வேண்டும். பள்ளிக்கு கோடை விடுமுறை அளிக்கும் சமயத்தில், வடிகால் கட்டினால் போக்குவரத்து பிரச்னை ஏற்படாது என ஆலோசிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைகளை முடித்தபின், மேம்பாலத்தில் மின் விளக்கு வசதி உள்ளிட்டவை செய்யப்பட உள்ளன. வரும் மே மாதத்துக்குள் இப்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, நெடுஞ்சாலைத்துறையினர் (கிராம சாலைகள்) திட்டமிட்டிருக்கின்றனர்.
எந்த மே மாதம்?
28-Mar-2025