உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிங்கப்பூர் ஹோம்ஸ் டு லைப் கிளை கோவையில் துவக்கம்

சிங்கப்பூர் ஹோம்ஸ் டு லைப் கிளை கோவையில் துவக்கம்

கோவை : சிங்கப்பூர் 'ஹோம்ஸ் டு லைப்' பர்னிச்சர் நிறுவன கிளை துவக்க விழா, கோவை கவுண்டம்பாளையம் ஜி.என்.மில்ஸ் பகுதியில் நேற்று நடந்தது.நிறுவனத்தின் சர்வதேச பிராண்ட் தலைவர் செலஸ்ட் புவா கூறுகையில், ''உலகளவில் பர்னிச்சர் வழங்கி வருகிறோம். கோவை மக்களுக்கு இந்த விற்பனை மையம், புதிய அனுபவத்தை தரும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்றவாறும் பர்னிச்சர் வழங்குகிறோம். இது இந்தியாவின், 20வது கிளை மற்றும் தமிழகத்தின் முதல் கிளை.எங்களுக்கென பிரத்யேக தயாரிப்பு நிறுவனம் உள்ளது. விற்பனைக்கு பின் சிறந்த சேவை வழங்கப்படும். பர்னிச்சருக்கு வேறு யாரும் வழங்காத, 10 ஆண்டு தரத்துக்கான உத்தரவாதத்துடன் வடிவமைப்புகளை வழங்குகிறோம்,'' என்றார்.முன்னதாக, நிறுவனத்தின் சர்வதேச பிராண்ட் தலைவர் செலஸ்ட் புவா, தேசிய தலைவர் வரூண் காந்த், ஜி.என்.மில்ஸ் கிளையின் உரிமையாளர் ரகுபதி, அக்சரா அசோசியேட்ஸ் பர்னிச்சர் ஷோரூம் உரிமையாளர் ராஜ்குமார் ஆகியோர், புதிய கிளையை துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை