ஒற்றை, இரட்டை கம்பு சிலம்பம்; சொல்லி அடிக்கும் மாணவர்கள்
கோவை; கோவை வருவாய் மாவட்ட அளவில், பள்ளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டு போட்டிகள், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், 7ல் துவங்கியது; 16ல் நிறைவடைகிறது. கடந்த இரு நாட்களாக சிலம்பம் போட்டி நடந்தது. நேற்று, 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான சிலம்பம் போட்டியில், 30 கிலோ எடைக்கும் கீழ் நாகுல், சைலேஷ், லோகேஷ் ஆகியோர், 35 கிலோவுக்கும் கீழ் நிதிஷ், அஷ்வதமன், மிதுன் ஆகியோர், 40 கிலோவுக்கும் கீழ் ரோகித், ஸ்ரீஹரி, தமிழ்செல்வன் ஆகியோர் முதல் மூன்று இடங்கள் வென்றனர். அதேபோல், 45 கிலோவுக்கும் கீழ் அபிமன்யு, சர்வேஸ், தரணிதரன் ஆகியோர், 50 கிலோவுக்கும் கீழ் அஷ்வின், கிரித்திஷ், ராகுல் ஆகியோர், 60 கிலோவுக்கும் கீழ் ஹரீசன், கவுதம், ரூபேஸ்குமார் ஆகியோர், 60 கிலோவுக்கும் மேல் பிரணேஷ், வசந்தவேல், கிருத்திக் ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். ஒற்றை கம்பு போட்டியில் ரோகித், மதன்குமார், சந்துரு ஆகியோர், இரட்டை கம்பு போட்டியில் அணிருத், ரங்கராஜன், சர்வேஷ் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் வென்றனர். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒற்றை கம்பு போட்டியில், ஜோஸ்வா, அருண்ராஜா, ஸ்ரீ சர்வின் ஆகியோர், இரட்டை கம்பு போட்டியில் நிலாஷ், அகிலேஷ், கோகுல கிருஷ்ணா ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர்.