உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்நடைத்துறையின் திறன் மேம்பாட்டு பயிற்சி; படித்த இளைஞர்களுக்கு அழைப்பு

கால்நடைத்துறையின் திறன் மேம்பாட்டு பயிற்சி; படித்த இளைஞர்களுக்கு அழைப்பு

பொள்ளாச்சி; கோவை கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில், இளம் விவசாயிகளுக்கான கால்நடை பராமரிப்பு தொழில்நுட்பங்கள் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கால்நடைத்துறை பொள்ளாச்சி கோட்ட உதவி இயக்குனர் சக்ளாபாபு கூறியிருப்பதாவது: கோவை கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில், கால்நடை துறை மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக, இளம் விவசாயிகளுக்கு சுயதொழில்கள் துவங்க பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. குறிப்பாக, கால்நடைகளில் இனப்பெருக்க மேலாண்மை, சினைப்பருவம், பால் பண்ணை, கோழிப்பண்ணை, ஆடு மற்றும் பன்றி வளர்ப்பு, மீன்வளம் மற்றும் இதர கால்நடை தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்கான திறன் மேம்பாட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. இதில், விவசாயிகள், படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். மாதந்தோறும், 20 நாட்களுக்கு, 30 பயனாளிகள் வீதம் 6 மாதங்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்பு, காலை, 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. இதற்கு, கால்நடைத்துறை வாயிலாக, 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. இதில், பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள பயனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம். அதற்கு, அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி விபரம் அறிந்து பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு கால்நடை உதவி இயக்குனரை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை